A Guide for TRB Drawing Teacher


நூலைப்பற்றி....

              தமிழக அரசின் ஓவிய ஆசிரியர் தேர்வுக்கான TRB எனும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ள  இப்புத்தகத்தில் கலைக்கூறுகள், கலைக் கோட்பாடுகள், சுவர் ஓவியங்கள், சிற்றோவியங்கள், தற்காலக்கலை, ஐரோப்பிய கலை வரலாறு, மறுமலர்ச்சி கால ஓவியர்கள், பாறை ஓவியங்கள், எகிப்திய கலை, தமிழ் இலக்கியத்தில் கலைச்சொற்கள், நூல்களும் அதன் ஆசிரியர்களும், தமிழக விளக்கப்பட ஓவியர்கள், கேலிச்சித்ர ஓவியர்கள், கலை இயக்குனர்கள், தமிழக கலை நிறுவனங்கள், உளவியல், கற்பித்தல் திறன் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் வகையிலான கொள்குறி வகை வினா விடைகள்  தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூல் மிகச்சிறந்த ஆசிரியர்களை கொண்டு தொகுக்கப்பட்டுள்ளதுடன் பாடத்திட்டம், மாதிரி வினாவிடை, ஆசிரியர் தேர்வு வழிமுறைகள் மற்றும் ஆசிரியருக்கான தகுதிகள் என அனைத்து வழிகாட்டுதல்களையும் மேற்கொள்வது இதன் சிறப்பு.

ஆசிரியரைப்பற்றி....

          ஓவியர், கலைஆசிரியர் மற்றும் கலை ஆய்வாளர் என அறியப்படுகின்ற P.ஸ்டுபர்ட் சிபி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொடுமுட்டி எனும் ஊரில்பிறந்தார். ஓவியம் மீது பற்று கொண்ட இவர் நாகர்கோயில் சித்ரா ஓவியப்பள்ளியில் தன்னுடைய ஓவிய பயிற்சியை துவங்கினார் பின்னர் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் தன்னுடைய இளங்கலை மற்றும் முதுகலை கவின்கலை கல்வியை வண்ணக்கலை துறையில் முடித்து பல்கலைகழக முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற இவர் பல்கலைகழக மானிய குழுவின் நிதி நல்கையுடன் தமிழ் பல்கலைகழகத்தில் பேராசிரியர் பவுன்துரை அவர்களின் வழிகாட்டுதலின் படி ஆய்வு மேற்கொண்டு MPhil பட்டதையும் பெற்றார் பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக படத்திட்டத்தின் கலை மற்றும் வடிவமைப்பு ஆசிரியராக பணிபுரிந்த இவர் தற்போது தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

 விரைவில் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும்....

FREE WORLDWIDE SHIPPING

BUY ONLINE - PICK UP AT STORE

ONLINE BOOKING SERVICE