ஓவியர், கலைஆசிரியர் மற்றும் கலை ஆய்வாளர் என அறியப்படுகின்ற
P.ஸ்டுபர்ட் சிபி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொடுமுட்டி எனும்
ஊரில்பிறந்தார். ஓவியம் மீது பற்று கொண்ட இவர் நாகர்கோயில் சித்ரா
ஓவியப்பள்ளியில் தன்னுடைய ஓவிய பயிற்சியை துவங்கினார் பின்னர் பாரதிதாசன்
பல்கலைகழகத்தில் தன்னுடைய இளங்கலை மற்றும் முதுகலை கவின்கலை கல்வியை
வண்ணக்கலை துறையில் முடித்து பல்கலைகழக முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற இவர்
பல்கலைகழக மானிய குழுவின் நிதி நல்கையுடன் தமிழ் பல்கலைகழகத்தில்
பேராசிரியர் பவுன்துரை அவர்களின் வழிகாட்டுதலின் படி ஆய்வு மேற்கொண்டு
MPhil பட்டதையும் பெற்றார் பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக படத்திட்டத்தின்
கலை மற்றும் வடிவமைப்பு ஆசிரியராக பணிபுரிந்த இவர் தற்போது தமிழ்நாடு இசை
மற்றும் கவின்கலை பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு
வருகின்றார்.
